திருமணமான பெண் வேறு ஒரு ஆணுடன் இருந்தால் நீதிமன்றம் பாதுகாப்பு வழங்காது என்று உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருமணமான பெண் கணவனை விவாகரத்து செய்யாமல் வேறு ஒரு ஆணுடன் வசிக்கும் பட்சத்தில் உயர்நீதிமன்றத்தில் இருந்து பாதுகாப்பு பெற முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஆஷா தேவி மற்றும் சூரத்குமார் இருவரும் மேஜர். இவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். யாரும் தங்கள் வாழ்க்கையில் தலையிட கூடாது என்றும் வாதிட்டனர். ஆஷா தேவி முன்னர் மகேஷ் சந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துள்ளார்.
ஆனால் அவர் விவாகரத்து செய்யாமல் சூரத்குமார் உடன் வாழ தொடங்கியுள்ளார். இது சட்டரீதியாக குற்றமாகும். இதனை விசாரித்த நீதிபதிகள் அமர்வு இந்த உறவு லிவ்-இன் உறவு அல்லது திருமணத்தின் இயல்பில் உள்ள உறவு என்பதன் அடிப்படையில் வராது என்று அவர் தெரிவித்தார். இதற்காக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் கூறியுள்ளார்.