நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த இந்திய தம்பதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் விபத்துக்குள்ளான தாரா ஏர் என்னும் விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர் பயணித்திருக்கிறார்கள். தற்போது, அவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவை சேர்ந்த அசோக் குமார் திரிபாதி-வைபவி பண்டேகர் என்ற தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
நீதிமன்ற உத்தரவுப்படி, விவாகரத்துக்குப் பின் வருடந்தோறும் 10 நாட்கள் தம்பதியர் இருவரும் குழந்தைகளோடு ஒன்றாக இருக்க வேண்டும். எனவே, தானேவில் குழந்தைகளோடு வசித்து வந்த வைபவி, இந்த வருடம் விடுமுறைக்காக முன்னாள் கணவரான அசோக் குமாருடன் சுற்றுலா சென்றிருக்கிறார். அந்த விமானம் விபத்துக்குள்ளானதில் இத்தம்பதி, குழந்தைகளோடு பரிதாபமாக பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.