தேனி மாவட்டத்தில் மனைவியை பிரித்து வீட்டில் தனியாக இருந்த கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி உள்ள இந்திரா காலனியில் கருப்பசாமி(27) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி சாந்தி 2 மகள்களையும் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த கருப்புசாமி மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து நேற்று கருப்பசாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கருப்புசாமியின் தந்தை ஜெயராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.