Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விவாகரத்தான பெண்… மறுமணம் செய்ய தேர்ந்தெடுத்த நபர்… மோசடி செய்த பரிதாபம்…!

சென்னையில் தன்னை தொழிலதிபர் என்று கூறி பல பெண்களை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 40 வயது பெண் ஒருவர் போலீஸாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், எனக்குத் திருமணமாகி 13 வயதில் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக எனது கணவரை சமீபத்தில் விவாகரத்து செய்துவிட்டேன். அதன்பின் நான் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தேன்.

அப்போது எனக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதுடைய மனோகரன் என்ற தொழிலதிபர் பழக்கமானார். அவரும் விவாகரத்து ஆனவர் என்று சொன்னார். அதன்பின் நாங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். அதனால் தன் வருங்கால கணவருக்கு செல்போன் போன்ற விலை உயர்ந்த பல பொருட்களை பரிசாக அளித்தேன்.

இந்நிலையில் தனக்கு மருத்துவ செலவுக்காக 10 லட்சம் வேண்டும் என்று அவர் கேட்டார். நானும் தன்னை கல்யாணம் செய்து கொள்பவர் தானே கேட்கிறார் என்று அவரது வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினேன். அதன்பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதிலிருந்து நான் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்துகொண்டேன்.

எனவே என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த மனோகரன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற போலீஸார் மனோகரனின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அதன்படி அவர் ஹைதராபாத்தில் இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

அதன்பிறகு மனோகரனிடம் மேற்கொண்ட விசாரணையில் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்றும் இதுபோல பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வந்ததுள்ளார் என்றும் தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்ட மனோகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Categories

Tech |