சூரரைப்போற்று திரைப்படம் வெளியாவது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் கடந்த மார்ச் முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், திரையரங்குகள் திறப்பதில் மேலும் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் பல பிரபல நட்சத்திரங்கள் தங்களது படங்களை OTT தளங்களில் வெளியிட தொடங்கி விட்டார்கள். அந்த வகையில்,
பெரும்பாலானோரால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான நடிகர் சூர்யா நடிப்பில் OTT தளத்தில் வெளியாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம், அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்திய விமான துறை தடையின்மை சான்றிதழ் கிடைக்க தாமதம் ஆனதால், படம் வெளியாகும் தேதி தள்ளிப்போகும் என நடிகர் சூர்யாவால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சூர்யா நடிக்கும் சூரரை போற்று படத்திற்கு இந்திய விமானத்துறை தடையின்மை சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் படக்குழுவினர் படத்தை தீபாவளியன்று வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படத்தின் ஆகாசம் பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் படத்தின் டிரைலரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.