இந்தியாவில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருப்பதால் அனைத்து துறை சார்ந்த ஊழியர்களுக்கும் போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வருங்கால தொழிலாளர் வைப்பு நிதியான இபிஎப்ஓ-வும் போனஸ் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமூக பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து இபிஎப்ஓ-வின் குரூப் சி மற்றும் குரூப் பி பணியாளர்களுக்கு உற்பத்தி திறன் சார்ந்த போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பின்படி தகுதியான ஊழியர்களுக்கு போனசாக 60 நாட்கள் சம்பளத் தொகை 13,806 ரூபாய் அதிகபட்சமாக வழங்கப்படும். இந்த போனஸ் தொகை தற்காலிக ஊழியர்கள் மற்றும் நிரந்தர பணியாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.