தீபாவளி பண்டிகையை கொண்டாட வேலூர் மத்திய சிறையில் 19 கைதிகளுக்கு 3 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு சிறை கைதிகளும் தீபாவளியை கொண்டாட வாய்ப்பளிக்க வேண்டும் என நினைத்து, வேலூர் மத்திய சிறை சாலையில், நன்னடத்தையை கணக்கில்கொண்டு 19 கைதிகளுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட மூன்று நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 19 கைதிகளும் அவர்களது குடும்பங்களும் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளனர்.