ரிக் இயந்திரம் மூலம் 100 அடிக்கு சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க முயற்சி மேற்கொள்ள உள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பு குழுவினர் 30 மணி நேரமாக போராடியும் எந்த முயற்சியும் பலன் அளிக்காமல் 26 அடியில் இருந்த குழந்தை பின் 75 அடி சென்று அதன் பின் தற்போது 80 அடிக்கும் கீழ் சென்றுள்ளது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேசிய பேரிடர் மீட்பு குழு சார்பிலும் , திரைக்கலைஞர்கள் சார்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தற்போது என்.எல்சி ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய எழுச்சியை மேற்கொள்ள உள்ளனர். அதன்படி குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகாமையில் 100 அடிக்கு குழி தோண்டி சுரங்கப்பாதை அமைத்து 80 அடியில் சிக்கியுள்ள குழந்தையை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும், ரிக் இயந்திரம் மூலம் நான்கு மணி நேரத்தில் சுரங்கம் அமைத்து குழந்தையை காப்பாற்ற இயலும் என்றும் தெரிவித்து உள்ளனர். ஆகையால் நாளை காலைக்குள் சுஜித் மீட்கப்பட்டு விடுவார் என்ற நம்பிக்கை தற்போது எழுந்துள்ளது.