Categories
அரசியல்

“தீபாவளி ஸ்பெஷல்” நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடக்கூடிய சூப்பர் இனிப்புகள்…. இத‌ ட்ரை‌ பண்ணி பாருங்க…..!!!!!

தமிழகத்தில் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நாளை தான் தீபாவளி பண்டிகையாக தென்னிந்தியாவில் கொண்டாடுகிறோம். இந்த தீபாவளி பண்டிகையை புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவோம். இந்நிலையில் தென்னிந்தியாவை பொருத்தவரை தீபாவளி பண்டிகைய`ன்று காலையில் இட்லி மற்றும் ஆட்டுக்கறி தான் முக்கியமான சாப்பாடாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நரகாசுரனை வதம் செய்த நாளை கொண்டாடுவதன் காரணமாக பெரும்பாலும் தீபாவளி பண்டிகையின் போது மட்டன் தான் பெரும்பாலான வீடுகளில் சமைக்கப்படும்.

ஆனால் வட இந்தியாவில் ராமர் அயோத்தியில் ஆட்சி அமர்ந்ததை தீபாவளி பண்டிகையாக கொண்டாடுவதோடு பல்வேறு விதமான விரதங்களையும் இருப்பதால் சைவ சாப்பாடு மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது அனைவராலும் இனிப்புகள் செய்யப்படும். ஆனால் வீட்டில் இருக்கும் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இனிப்புகளை சாப்பிட முடியாது. எனவே சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களும் சேர்த்து சாப்பிடக்கூடிய சில இனிப்புகளை எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

 

உலர் திராட்சை மற்றும் பேரிச்சம் பழ லட்டு:

தீபாவளி பண்டிகை அன்று  பூந்தியால் செய்யப்பட்ட லட்டு தான் பெரும்பாலானவர்களால் தயாரிக்கப்படும். நாம் தற்போது சர்க்கரை சேர்க்காத சுவையான லட்டு எப்படி செய்வது குறித்து பார்க்கலாம். இந்த லட்டு தயார் செய்வதற்கு பாதாம், பேரிச்சை, முந்திரி, பிஸ்தா போன்றவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு இனிப்புக்காக தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனையடுத்து உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால் லட்டு தயாராகிவிடும்.

ஆப்பிள் கீர்:

பண்டிகை காலங்களில் பொதுவாக மக்களால் வீடுகளில் ஏதாவது ஒரு கீர் செய்யப்படும். ஏனெனில் இனிப்புகள் நிறைய சாப்பிடுவதால் ஏதாவது ஒரு கீர் செய்வார்கள். இதனால் நாம் தற்போது சுவையான ஆப்பிள் கீர் எப்படி செய்வது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இதற்கு முதலில் ஆப்பிள் பழங்களை நன்றாக வெட்டி வைத்துக்கொண்டு, தேவையான அளவு வெல்லம், தேவையான அளவு தேங்காய் பால் மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றை சேர்த்து சுவையான கீர் செய்து கொள்ளலாம். இதில் சிறிதளவு ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பாதாம் பர்பி:

இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு இனிப்பு ஆகும். இதை செய்வதற்கு தேவையான அளவு பாதாம்களை எடுத்து அதை நன்றாக வறுத்து சிறிதளவாக நறுக்கி கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு தேன் மற்றும் ஏலக்காய் தூளை நன்றாக கலந்து விட்டு உங்களுக்கு விருப்பப்பட்ட அச்சில் வைத்து எடுத்துக் கொண்டால் சுவையான பாதாம் பர்பி ரெடியாகிவிடும்.

கேரட் அல்வா:

இது ஒரு பிரபலமான இனிப்பு வகை ஆகும். இதை செய்வதற்கு முதலில் தேவையான அளவு கேரட்டை எடுத்து நன்றாக துருவி கொள்ள வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு பால் சேர்த்து கேரட் நன்றாக வேகும் வரை வதக்க வேண்டும். பாலில் மட்டுமே கேரட்டை வேக வைக்க வேண்டுமே தவிர தண்ணீர் ஊற்ற கூடாது. இதனையடுத்து தேவையான அளவு நெய் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கினால் கேரட் அல்வா தயாராகிவிடும். இதில் உங்களுடைய தேவைக்காக சிறிதளவு தேனை சேர்த்துக் கொள்ளலாம்.

அன்னாச்சி பழ புட்டிங்:

இதை செய்வதற்கு தேவையான அளவு அண்ணாச்சி பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதனுடன் தேவையான அளவு எலுமிச்சை சாறு, இலவங்கப்பட்டை, சுண்ணாம்பு இலைகள், ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் போன்றவற்றை சேர்த்து ஒரு கப் தேங்காய் பாலில் நன்றாக வேக வைக்க வேண்டும். உங்களுக்கு தேவையான அளவு பதம் கிடைத்தவுடன் அதை இறக்கி உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது நேரம் ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும். மேலும் அதன் பிறகு எடுத்துப் பார்த்தால் சுவையான அண்ணாச்சி பழ புட்டிங் தயாராகிவிடும்.

Categories

Tech |