Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

”இந்த வெற்றி எங்களுக்கு தீபாவளி பரிசு” புதுவை முதல்வர் பேட்டி …!!

புதுவை காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றார்.

புதுச்சேரியில் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21_ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை விட 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.இதனிடையே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் வெற்றி குறித்து பகிர்ந்து கொண்டார்.

Image result for puducherry kamaraj nagar

அப்போது முதல்வர் நாராயணசாமி கூறுகையில் காமராஜ் நகர் மக்களுக்கு நன்றி தெரிவித்து என்.ஆர் காங்கிரஸ் கட்சியை முழுமையாக காமராஜ் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் புறக்கணித்து விட்டார்கள். எங்களுடைய கூட்டணி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் அமோக வெற்றி வாய்ப்பை தந்திருக்கிறார்கள். இந்த வெற்றி எங்களுடைய அரசுக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்தது மட்டுமில்லாமல் புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. இதை காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி மக்கள் எங்களுக்கு கிடைத்த தீபாவளி பரிசாக கொண்டாடுவோம் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.

Categories

Tech |