சுர்ஜித் பத்திரமாக மீட்க வேண்டுமென்று தமிழகம் எங்கும் பல பகுதிகளில் பிராத்தனை நடைபெற்று வருகின்றது.
திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 42 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 தீயணைப்பு வீரர்கள் சென்று குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது.
பள்ளம் தோண்டும் பணியில் 25 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இயந்திரம் மூலமாக 5 மணி நேரம் துளையிடும் பணி நடைபெற்று வருகின்றது. குழந்தை சுர்ஜித்தை பத்திரமாக மீட்க வேண்டுமென்று தமிழகமெங்கும் பல்வேறு பகுதியில் பிராத்தனை நடைபெற்று வருகின்றது. இதன் ஒருபகுதியாக குழந்தையை மீட்கும் பணி நடைபெறுவதால் மணப்பாறை சுற்றுவட்டாரத்தில் தீபாவளி கொண்டாட்டம் இல்லாமல் சுர்ஜித் வருகைக்கு காத்திருக்கின்றனர்.