Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

“தீபாவளி ரைடு” கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட பணம்…… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி….!!

அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென சோதனை நடத்தியதில் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தீபாவளியை முன்னிட்டு அதிக லஞ்ச பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அலுவலர் லாவண்யா தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து அங்குள்ள பொது மக்களிடமும் அலுவலர்களிடமும் சோதனையில் ஈடுபட்டனர்.

Related image

அதில் கணக்கில் காட்டப்படாத பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பொதுமக்களிடம் பறிமுதல் செய்த பணத்தை உரிய ஆவணங்கள் காட்டி பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் கூறியது பலரிடம் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தியது அலுவலர்காள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |