நாமக்கல்லில் ஆடுகளின் விற்பனை வர்த்தகம் ரூபாய் இரண்டு கோடியைத் தாண்டியதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல்லில் வாரந்தோறும் நடைபெறும் மாட்டு சந்தையானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆடுகள் விற்பனை செய்வதற்காக இறக்குமதியாகும். இந்த வார ஆட்டுசந்தை தீபாவளி பண்டிகை என்பதால் அதிக அளவு ஆடுகள் விற்பனையானது. குறிப்பாக ஒரு ஜோடி ஆடுகள் ரூபாய் 12 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட பலவகையான ஆடுகளும் விற்பனையில் இருந்தன. குட்டி ஆடுகள் ரூபாய் 300 லிருந்து 800 ரூபாய் வரை விற்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்ட ஆடுகளின் வர்த்தக ரூபாய் இரண்டு கோடியைத் தாண்டியதாக ஆடுகள் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களை கட்டியதால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.