Categories
மாநில செய்திகள்

“தீபாவளி சீசன் சிறப்பு ரயில்” குறைந்த செலவில் பாதுகாப்பான பயணம்…. மக்களின் கோரிக்கை….!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை வருவதால் தமிழக அரசு போக்குவரத்து கழகம் பொதுமக்களின் நலனுக்காக மாநில முதல் 4000 க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கி அதற்கான முன்பதிவு நடை பெற்று வருகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் தென்னக ரயில்வே தீபாவளி சீசன் சிறப்பு ரயில்களை இதுவரை அறிவிக்காதது பொதுமக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கக் கூடிய வகையில் நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் கொல்லம் எக்ஸ்பிரஸ் போன்ற 10க்கும் மேற்பட்ட ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரயில்வேகளுக்கான தீபாவளி முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் காலியாகி விட்டது. மேலும் தாம்பரம்-நாகர்கோவில் இடையே தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டது. எனவே தென்னக ரயில்வே உடனடியாக தீபாவளி சீசன் சிறப்பு ரயில் இயக்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். பண்டிகை காலத்தில் பேருந்துகளில் இடம் கிடைக்காது என்றும் தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்வாக இருக்கும் என்பதால் மக்கள் ரயிலில் பயணிப்பதற்கு பெரிதும் விரும்புகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் உடுமலை ஆகிய பகுதிகளில் மதுரை மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு கோவை மற்றும் பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு ரயில் போக்குவரத்து இல்லை. இதனால் தீபாவளி பண்டிகைக்காக கோவையில் இருந்து பொள்ளாச்சி வழித்தடத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை இணைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.

மேலும் சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி போன்ற பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு குறைந்த செலவில் குறைந்த நேரத்தில் பாதுகாப்பாக பயணிக்க முடியும். இதுகுறித்து தென்னக ரயில்வே ஆலோசித்து சிறப்பு ரயில்களை விரைவாக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |