Categories
அரசியல்

“தீபாவளி ஸ்பெஷல்” அபுதாபியில் முதன் முறையாக ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி…. வெளியான அறிவிப்பு….!!!!

அபுதாபியில் உள்ள முதன்மையான ஓய்வு பெற்றும் பொழுதுபோக்கு அம்சமாக யாஸ் தீவு இருக்கிறது. இந்த தீவில் அக்டோபர் 24-ஆம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் யாஸ் தீவுக்கு வருவார்கள்.

இதன் காரணமாக யாஸ் தீவில் பிரம்மாண்டமான இசை கச்சேரி மற்றும் பிரபலமான சமையல் கலைஞர்களின் சுவையான உணவுகள் வழங்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டில் ஏ.ஆர் ரகுமானின் பிரம்மாண்ட இசை கச்சேரி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற இருக்கிறது. வருகிற 29-ஆம் தேதி யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் ஏ.ஆர் ரகுமானின் பிரம்மாண்ட இசைக் கச்சேரி நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் கூறியதாவது, அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் முதன் முறையாக இசை கச்சேரியை நடத்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். உலகெங்கும் உள்ள ரசிகர்கள் என்னுடைய இசையை கண்டு ரசிக்க போகிறார்கள் என்பதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அபுதாபி ஒரு முக்கியமான ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு சுற்றுலா த்தளமாக இருப்பதால் அங்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

அவர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகை இசை கச்சேரியை கொண்டாடுவதை நினைக்கும் போது மிகவும் ஆவலாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் யாஸ் தீவில் புகழ்பெற்ற சமையல் கலைஞர்களான வினீத் பாட்டியா, ரன்வீர் ப்ரார் போன்றவர்களின் உணவுகளும் இடம்பெற இருக்கிறது. அதோடு யாஸ் தீவில் நடைபெறும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |