Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல் மொறுமொறு தட்டை…செய்வது எப்படி …!!!

மொறுமொறு தட்டை

தேவையான பொருட்கள் :

அரிமாவு – 1  கப்

உளுந்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு –  1  டேபிள் ஸ்பூன்

கருப்பு எள் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் –  1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்

வெண்ணெய் – 1  டேபிள் ஸ்பூன்

நறுக்கிய கறிவேப்பிலை  –  சிறிது

எண்ணெய் – தேவைக்கேற்ப

உப்பு – தேவைக்கேற்ப

தட்டைக்கான பட முடிவுகள்

செய்முறை :

கடாயில் அரிசிமாவு சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளவேண்டும் .பின் தனியாக உளுந்தம்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . மிக்சியில் உளுந்தம்பருப்பு , பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து அரிசிமாவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும் . இதனுடன் ஊறவைத்த கடலை பருப்பு ,எள் , கறிவேப்பிலை , மிளகாய்த்தூள் , பெருங்காயத்தூள் ,வெண்ணெய் ,உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு  பிசைந்துக் கொள்ள வேண்டும் . பிசைந்தமாவை சிறு உருண்டைகளாக உருட்டி தட்டைகளாக்கி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான மொறுமொறு தட்டை தயார் !!!

Categories

Tech |