Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு காட்சி இரத்து எதற்கு ? அமைச்சர் பதில் …!!

பிகில் உட்பட சிறப்பு காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கான காரணத்தை அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த  கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராகவும்  அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் நடித்திருக்கின்றார்.

 

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் காமெடி நடிகர் விஜய், டேனியல் பாலாஜி, யோகி பாபு, பரியேரும் பெருமாள் கதிர் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.பிகில் படத்தின் ட்ரைலர் கடந்த 12_ஆம் தேதி வெளியாகி பல சாதனைகளை செய்து வருகின்றது. மேலும் பிகில் படம் 25_ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தீபாவளிக்கு எந்த சிறப்பு காட்சிக்கும் திரையிட அனுமதி இல்லை என்று நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜீ கோவில்பட்டியில் தெரிவித்தார்.

 

இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு சென்னையில் பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜீ கூறுகையில் , தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ரூ.2,000 வரை பணம் செலவழிக்கின்றனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தது இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தீபாவளிக்கு சிறப்பு காட்சி என்று வசூல் செய்த பணத்தை திருப்பிக் கொடுக்க வலியுறுத்தி உள்ளோம் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்தார்.

Categories

Tech |