Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு முன்பதிவு அக்.23_ஆம் தேதி தொடக்கம்…!!

தீபாவளி அரசு பேருந்து சிறப்பு முன்பதிவு அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது அது தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு கூட்டத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்குவது , பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் , பேருந்து நிலையங்களில் சிறப்பு வசதிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தீபாவளிக்கு பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் , பயணிகள் வசதிக்காக பேருந்து நிலையங்களில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |