Categories
திருப்பூர் பல்சுவை மாவட்ட செய்திகள்

“தீபாவளி ஸ்பெஷல்” சிறப்பு சலுகையுடன் போதை பொருள் விற்பனை……. 10கிலோ பறிமுதல்…. 2 பேர் கைது…!!

திருப்பூர் அருகே கஞ்சா விற்க முயன்ற இரண்டு வாலிபர்களை ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், உதவி காவல் ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணியளவில் இரண்டு வாலிபர்கள் சந்தேகிக்கும் வகையில் அங்குமிங்கும் சுற்றி திரிந்தனர். பின் அவர்களை பிடித்து சோதனையிட்டபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Image result for கஞ்சா விற்பனை

இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இருவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், தீபாவளிக்கு சிறப்பு சலுகையாக விலை குறைத்து கஞ்சா பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |