தீபாவளிக்கு அரசு பேருந்துக்காக டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது.
அக்டோபர் மாதம் 27_ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடத்தப்படுகின்றது. இதை கொண்டாட வெளியூர்களில் பணிபுரிபவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் தமிழகத்தில் உள்ள பேருந்துகள்,ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதை சமாளிக்க அரசும் கூடுதலாக போக்குவரத்து சேவையை விரிவாக்கும். மேலும் பயணிகளின் நலன் கருதி தீபாவளிக்கான முன்பதிவும் முன்கூட்டியே தொடங்கி விடும்.
இந்நிலையில் போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளிக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. அதன்படி அக்டோபர் 25ம் தேதி தீபாவளி பயணமாக அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு செல்பவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிக்கெட்டை முன்பதிவு செய்ய www.tnstc.in , www.redbus.in தனியார் இணைய தளங்களிலும் மூலம் பொதுமக்கள் அரசு பேருந்துக்காக டிக்கெட் முன்பதிவை செய்து கொள்ளலாம் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.