Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் – மூன்றாம் சுற்றில் ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.

மெல்போர்னில் இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும் செர்பியாவின் நட்சத்திர வீரருமான நோவாக் ஜோகோவிச், ஜப்பானின் டட்சுமா இடோவுடன் மோதினார்.

இப்போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-1,6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டட்சுமாவை வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் நடைபெறவுள்ள மூன்றாம் சுற்று போட்டியில் அவர் மீண்டும் ஜப்பானை சேர்ந்த யோஷிஹிடோ நிஷியோகாவுடன் (Yoshihito Nishioka) பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

Categories

Tech |