சேலத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் திமுக வெற்றியை அதிமுகவால் ஏற்க முடியவில்லை என்று விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டடம் தாரமங்கலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு க ஸ்டாலின் தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் , 8 ஆண்டுகளாக நீங்கள் தானே ஆட்சி செய்யுறீங்க. மாவட்டத்தை பிரிக்கிற தவிர வேற என்ன பண்ணுணிங்க . மத்தியில் இருக்கின்றவர்கள் மாநிலத்தைப் பிரிக்கிறாங்க. இங்க இருக்கின்றவங்க மாவட்டத்தை பிரிக்கின்றாங்க. மாவட்டத்தை பிரிப்பதால் மக்களுக்கு என்ன பலன் கிடைக்கிறது. வேலூரில் வெற்றி பெற்றோம். அதிமுக என்ன சொன்னங்க இது அதிமுக வெற்றி பெற்றது என்று சொல்லுறாங்க.
திமுக பாண்டிச்சேரி சேர்த்து 38 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது வேலூரைச் சேர்த்து திமுக அணி மதசார்பற்ற கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெற்று இருக்கும். அதுல யாரு பெரிய வெற்றி. திமுக 40க்கு 39. அதிமுக 40க்கு 1. 1 பெருசா 39 பெரிசா. கேட்டா என்ன சொல்றாங்கன்னா ஏற்கனவே நடந்த தேர்தலில் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளீர்கள். லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நீங்கள் வேலூரில் ஆயிரக்கணக்கு வாக்கு வித்தியாசத்தில் தானே வெற்றி பெற்று இருக்கீங்க என்று ஒரு விமர்சனத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.