Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக துணை நிற்கும்…! ”நீதி விசாரணை வையுங்க” விடக்கூடாது – ஸ்டாலின் ஆவேஷம் ..!!

விழுப்புரம் சிறுமி கொலைக்கு நீதி விசாரணை தேவை என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு சிறுமி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இன்று காலை மரணமடைந்தார்  என்றது தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் அருகே சிறுமியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க திமுக துணை நிற்கும் என்றும் , பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் உரிய நீதி விசாரணை தேவை என்று முகஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சிறுமியின் மரணத்திற்கு தொடர்புடையவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும் படி செய்யவேண்டும்.

மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க திமுக துணை நிற்கும் குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி இதுபோன்ற சிறுமி, பெண்களை காப்பாற்றும் என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |