தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. இதில் தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு ( கள்ளக்குறிச்சி , திருச்சிராப்பள்ளி , சென்னை வடக்கு , விருதுநகர் ) தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இன்று காலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கட்சியின் தலைமை அலுவலகம் வந்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அதில் ,
கள்ளக்குறிச்சி – சுதீஷ்
விருதுநகர் – அழகர்சாமி
வடசென்னை – மோகன்ராஜ்
திருச்சி – இளங்கோவன்
ஆகியோர் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்.