திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என ரேலா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், இன்று காலையில் இருந்து ஜெ.அன்பழகனுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது. ஜெ.அன்பழகனின் சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளன என்று ரேலா மருத்துவமனை கூறியுள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.