Categories
அரசியல்

புத்தாண்டு காலண்டர்…. “ஹிந்துக்கள் மத்தியி்ல் எரிச்சலை மூட்டிய திமுக”…. அப்படி என்னப்பா பண்ணாங்க….!!!

திமுகவைச் சேர்ந்த ஒரு பிரமுகர் அச்சிட்ட காலண்டரில் இந்துக்களின் பண்டிகைகள், அரசு விடுமுறை நாட்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு திமுக தலைவர்கள் வாழ்த்து கூறுகிறார்கள். ஆனால் இந்துக்களின் பண்டிகையான தீபாவளி போன்றவற்றிற்கு வாழ்த்துக்கள் கூறுவதில்லை என்று இந்து அமைப்புகள் மற்றும் பாஜக போன்ற கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

மேலும் திமுகவின் ஒரு தனியார் தொலைக்காட்சியில், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை போன்ற இந்துக்களின் பண்டிகை நாட்களில், சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் சமயத்தில் “விடுமுறை நாட்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள்” என்று தான் கூறப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது, தஞ்சை மத்திய மாவட்டத்தின் திமுக செயலாளராக இருக்கும் சந்திரசேகரன் இந்த வருட ஆங்கில புத்தாண்டு காலண்டரை சமீபத்தில் கொடுத்திருக்கிறார். அதில் இஸ்லாமிய பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் கட்சி நிர்வாகிகளது நினைவு நாள் உட்பட அனைத்தும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்து மதத்தின் பண்டிகைகள் மட்டும், அரசு விடுமுறை நாட்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தான் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்துக்களின் பண்டிகையை, அரசு விடுமுறை தினங்கள் என்று அச்சிட்ட அந்த பகுத்தறிவாதிகள், சுபமுகூர்த்த தினம், ஓரைகள் மற்றும் வாஸ்து தினத்தை அதில் குறிப்பிட்டிருப்பது தான் வேடிக்கை.

திமுகவினர், செய்யும் எந்த செயலிலும் இந்துக்களை எதிர்த்து செயல்படுகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது. எனவே திருப்பூர் மாவட்டத்தின் பாஜக, அந்த காலண்டர்  உடனடியாக திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

Categories

Tech |