Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீர் பிரச்னை மாவட்டம் முழுவதும் இன்று திமுக போராட்டம் …..!!

தண்ணீர் பிரச்சனையை போக்க தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியீட்டுள்ள அறிக்கையில்  குடிநீர் பிரச்சனையை போக்க கோரி ஜூன் 22-ஆம் தேதி முதல் மாவட்டம் வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

stalin dmk க்கான பட முடிவு

இந்நிலையில் திமுக சார்பில் குடிநீர் பிரச்சனையை போக்க , முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல கூடிய வகையில் மாவட்டம் வாரியாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடத்தபட இருக்கின்றது. இதில் திமுக மாவட்ட செயலாளர்கள் , சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். மழை வேண்டி அதிமுகவும் மாவட்டம் முழுவதும் இன்று  யாகம் நடத்துவது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |