டெல்லியில் திமுக நடத்தும் போராட்டத்தில் 14 கூட்டணி கட்சிகள் பங்கேற்றுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.மேலும் அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயக படுகொலை என்று கடுமையான கண்டனம் தெரிவித்த திமுக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்த் பகுதியில் திமுக மக்களவை தலைவர் TR.பாலு தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றது.
இதில் திமுக கூட்டணி கட்சி மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 14 கூட்டணி கட்சிகள் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் இந்தியன் முஸ்லீம் லீக் , ராஷ்டிரிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ் , திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.அதே போல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் , சரத்பவார் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சுரி , பிருந்தா காரத் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.