தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக பாஜக கட்சி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய போது, சகோதரர்களே இது ஒரு சின்ன நிகழ்ச்சி தான். இது ஒரு பெரிய மாநாடு கிடையாது, பொது கூட்டம் கிடையாது. ஆனால் இதை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுதுதான் கட்சினுடைய உண்மையான வலிமை நமக்குத் தெரிகிறது. மேடையில் இருந்து பார்க்கும் பொழுது சாதாரண பொதுமக்கள் இந்த பகுதியில் வசிப்பவர்கள்.
கட்சில புதுசா உறுப்பினராக சேர்ந்தவர்கள், பாரதிய ஜனதா கட்சியில் நானும் இணைந்து பாடுபட போகிறேன் என்று நினைக்கக் கூடியவர்கள் நீங்களாக வந்திருக்கீங்க, இது ரொம்ப ஆச்சரியம். 1260 இடமும் இதேபோல செழிப்பாக.. இதே போல உயிரோட்டமாக… இதே போல ஆழமாக…. நம்முடைய நிர்வாகிகள் பணி செய்ய வேண்டும் என்பதுதான் நம்முடைய கட்சியினுடைய நோக்கம்.
அதற்காகத்தான் ஒரு கூட்டமும், ஒருவ்வொரு கட்சியின் நிகழ்வும் அடித்தட்ட மக்களுக்காக பூத் அளவில் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இவர்களுக்கெல்லாம் மாற்று பாரதிய ஜனதா கட்சி தான். அவங்க வந்தா தான் சரியாக இருக்கும். 2024ல மோடி ஐயா தான் திரும்ப டெல்லியில் வரப்போறாரு. 400 எம்பி ஓட வரப்போறாரு. தமிழ்நாட்டில் இருந்து எவ்வளவு கொடுக்கப் போகிறோம் ? 25, 35, 39 என பேச ஆரம்பிச்சிட்டாங்க. இது மக்கள் மனதில் ஏற்பட்டிருக்க கூடிய உணர்வு. இந்த உணர்வு என்பது சாதாரணமாக ஏற்படாது.
மக்கள் எல்லா விஷயத்தையும் பார்ப்பாங்க. அந்த ஆட்சியை பார்த்தாங்க, இந்த ஆட்சியை பார்த்தார்கள். 18 மாதம் பார்த்தாங்க. மோடி அய்யாவுடைய ஆட்சிய பாக்குறாங்க. பாரதிய ஜனதா கட்சி செயல்பாட்டை பாக்குறாங்க. இது அவர்களாக அவர்கள் மனதிலேயே முடிவு செய்து இருக்கின்றார்கள். ஆட்சி மாற்றம் வேண்டும். மோடி ஐயா மறுபடியும் வரணும். இதில் மிகவும் முக்கியமானது.. அவர்கள் மனதில் நினைக்க கூடியதை வாக்காக மாற்ற வேண்டியது கட்சியினுடைய கடமை என தெரிவித்தார்.