Categories
அரசியல் மாநில செய்திகள்

மாவட்ட ஊராட்சியில் சம பலத்துடன் திமுக-அதிமுக …..!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக , அதிமுக 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய விடிய எண்ணப்பட்டு வருகின்றது.

வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக , அதிமுக என மாறி மாறி சரிக்கு சமமான இடங்களை பெற்ற நிலையில்  தொடர்ந்து 27 மணி நேரம் கடந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி 27 மாவட்டங்களில் நடந்த மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 13 மாவட்டங்களை அதிமுகவும் , 13 மாவட்டங்களை திமுகவும் கைப்பற்றியுள்ளது. சிவகங்கை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தொடர்ந்து இழுபறி நீடித்து வருகின்றது. அங்குள்ள 16 வார்ட்களில் அதிமுக 8 , திமுக 8 பெற்றதால் இந்த இழுபறி ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |