செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, ஆளுநரைப் பொறுத்தவரை பல தடவை சொல்லியுள்ளேன். தமிழ்நாட்டின் ஆளுநராக, தமிழ்நாட்டினுடைய நலனுக்காக அவர் செயல்பட வேண்டும். ஆனால் அவர் பிஜேபி, ஆர்எஸ்எஸ்ஸின் ஊதுகுலதாக தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவர் அப்படி செயல்படுவதால் இப்படிப்பட்ட கருத்துக்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை நாம் புறந்தள்ள வேண்டும். கூட்டணி தொடரும்.
சமீபத்தில் கூட நான் சொல்லியிருந்தேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரைக்கும், மதவாத சக்திகளை பொறுத்த வரைக்கும் அதை எதிர்க்கின்ற இயக்கங்கள் தமிழ்நாடு மட்டும் அல்ல, நாடு முழுவதும் ஓரணியாக ஒன்றிணை வேண்டும். ஒவ்வொரு இயக்கத்துக்கும் ஒரு கொள்கை உண்டு. ஆனால் இந்த நாட்டை சீரழிக்கின்ற இந்த மதவாத சக்திகளை எதிர்த்து அனைத்து இயக்கங்களும் ஓரணியில் திரண்டு, தேர்தலை சந்தித்தால் கண்டிப்பாக வெற்றி உறுதி என்பதை சமீபகமாக பல தடவை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டடை பொறுத்த வரைக்கும் இந்த கூட்டணி தொடரும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்த ஆவணப்படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்தபோதுதான் ராகுல்ஜியை கன்னியாகுமரியில் நடை பயணத்தை தொடங்கினார். அந்த தருணத்தில் நான் சந்திக்க முடியல. அதனால் மரியாதை நிமித்தமாக நான் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்த்தில் அவருடைய நடை பயணத்தில் கலந்து கொண்டேன் என தெரிவித்தார்.