திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலானது நேற்றைய தினமே இறுதி செய்யப்பட்டுவிட்டது .இந்நிலையில் இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க இருந்ததையடுத்து இன்று காலை 11 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .
இந்த கூட்டத்தில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , இந்திய கம்யூனிஸ்ட் துணைச் செயலாளர் வீரபாண்டியன் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் , விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் , காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் , ஐ.ஜே.கே கட்சியின் நிறுவனர் பச்சமுத்து மற்றும் தலைவர் ரவி பச்சமுத்து , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் தேவராஜன் உட்பட கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஒரு மணி நேரம் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார் . அந்த ஆலோசனையில் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக ஒரு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்து .
இதையடுத்து திமுக தலைவர் கூட்டணி கட்சி தலைவருடன் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டு திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளை அறிவித்தார்.அப்போது அவர் கூறுகையில் , மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் சென்னை வடக்கு , சென்னை தெற்கு , மத்திய சென்னை , ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி) , அரக்கோணம் , வேலூர் , தர்மபுரி , திருவண்ணாமலை , கள்ளக்குறிச்சி , சேலம் , நீலகிரி (தனி) , பொள்ளாச்சி , திண்டுக்கல் , கடலூர் , மயிலாடுதுறை , தஞ்சாவூர் , தூத்துக்குடி , தென்காசி (தனி) , திருநெல்வேலி ஆகிய இருபது தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது