சட்ட மன்றத்தில் நிகழ்த்த இருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது .
மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு திமுக பாராட்டு அளிக்கும் வகையில் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்த இருக்கிறது.மேலும் இக்கூட்டமானது மக்களவை தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக அவரது தலைமையில் நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க இருக்கிறார்கள் மேலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.