Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீங்க உத்தரவு போட்டா….. நாங்க கேட்கணுமா ? சட்டத்தை நாடிய திமுக …!!

தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் உணவு பொருட்கள் வழங்க  அரசு விதித்த தடையை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர்.

TN CM takes a dig over MK Stalin regarding spreading rumours about ...

இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்று தமிழக அரசு இந்த உணவு பொருட்களை நேரடியாக யாரும் வழங்கக்கூடாது. உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அரசுக்கு நிதி அளிக்கலாம், உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம் என்று உத்தரவிட்டது. இதற்க்கு திமுக, மதிமுக கண்டனம் தெரிவிதத்து. 

Centre Rejects TN Request To Make Tamil Official Language Of ...

இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுள்ளது. இதற்கான முறையீட்டை மூத்த வழக்கறிஞர் வில்சன் சென்னை உயர்நீதிமன்றம் தாக்கல் செய்துள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இதன் விசாரணை புதன்கிழமை நடைபெறும் என்று தெரிகின்றது.

Categories

Tech |