கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு ரஜினி , கமலுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 7_ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அவரின் சிலை திறப்பு விழா நடைபெறுகின்றது.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சிலையை திறந்து வைக்கிறார். இந்நிலையில் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மையத்தில் தலைவர் கமலஹாசன் ஆகியோருக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.