தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்று நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்தும் ஒரு சில கட்சிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் மார்ச் 2-ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச்-2 இல் குமரி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டம், மூன்றாம் தேதி மதுரை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 5 மாவட்டம், 4-ம் தேதி தருமபுரி, நாமக்கல், சேலம், 5ஆம் தேதி – தஞ்சை, கடலூர், விழுப்புரம், காஞ்சி, வேலூர், தி.மலை. ஆறாம் தேதி திருவள்ளூர், சென்னை, புதுச்சேரி மாவட்டத்திற்கு நேர்காணல் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.