Categories
அரசியல்

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது….!!

திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலானது நேற்றைய தினமே இறுதி செய்யப்பட்டுவிட்டது . தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி மட்டுமே இறுதி செய்யப்படாத நிலையில் நேற்று நடந்த மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் எந்தெந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது என்று இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது .

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் முறைப்படி கூட்டணி கட்சிகளுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கின்றார் .இந்நிலையில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது .

அதில் , திமுக போட்டியிடும் 20 தொகுதிகளாக தென் சென்னை , மத்திய சென்னை , வடசென்னை , ஸ்ரீபெரும்புதூர் , காஞ்சிபுரம் (தனி) ,  அரக்கோணம் , ஆரணி , திருவண்ணாமலை , வேலூர் , தருமபுரி  , நீலகிரி , தேனி , பொள்ளாச்சி , திண்டுக்கல் , தஞ்சை , மயிலாடுதுறை , தூத்துக்குடி , நெல்லை , தென்காசி (தனி) , கள்ளக்குறிச்சி , கடலூர் . காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளாக கன்னியாகுமரி  ,சிவகங்கை , விருதுநகர் , கிருஷ்ணகிரி , கரூர் , திருச்சி , தேனி , சேலம் , திருவள்ளுவர் (தனி) ,  புதுச்சேரி . விடுதலைச்சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்  சிதம்பரம் (தனி) , விழுப்புரம் (தனி) . மார்க்சிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் மதுரை , கோவை . இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் நாகை (தனி) ,  திருப்பூர் . மதிமுக போட்டியிடும் தொகுதிகள் ஈரோடு . இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் . கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் மற்றும் ஐ.ஜே.கே கட்சி பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக உத்தேச தொகுதி பட்டியல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |