Categories
அரசியல் மாநில செய்திகள்

“நாளை MLA பதவி ராஜினாமா” குறைகின்றது திமுக கூட்டணி MLA_க்கள் பலம்….!!

திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை நாளை ராஜினாமா செய்ய இருப்பதால் திமுக_வின் MLA_க்கள் பலம் குறைகின்றது.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. இடைத்தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் ஆட்சி மற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அதிமுக 9 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பாதுகாத்துக் கொண்டது. திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்று தன்னுடைய MLA_க்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. தற்போது தமிழக சட்டமன்றத்தில் திமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 110_ஆக அதிகரித்துள்ளது அதிகரித்துள்ளது.

தற்போது தீடிர் திருப்பமாக திமுகவின் MLA எண்ணிக்கை குறைய இருக்கிறது.அதாவது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது இவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த வாழ்த்து பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய இவர் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்தார்.இதனால் திமுக கூட்டணி MLA_க்கள் எண்ணிக்கை குறைகின்றது.

Categories

Tech |