திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா. புகழேந்தி போட்டியிடுவதாகவும், காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரன் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலுக்காக கடந்த 21ஆம் தேதி முதலே வேட்புமனு தாக்கல் துவங்கியது.
இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்பதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல திமுக கூட்டணி கட்சியான தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் வேட்புமனு தாக்கல் செய்தார்.