Categories
அரசியல் மாநில செய்திகள்

பதவி சுகத்துக்காக…. தமிழ்நாட்டின் உரிமையை…. பறிகொடுத்த கட்சி திமுக – துணை முதல்வர்…!!

பதவி சுகத்துக்காக தமிழ்நாட்டின் உரிமையை பறிகொடுத்த கட்சி திமுக என்று துணை முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை கண்ணகி நகரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இலங்கையில் தமிழர்கள் கொன்று குவித்த போது மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் அமைதி காத்த கட்சிதான் திமுக.

மேலும் திமுக செய்த கொடுமைகள் ஏராளம். எனவே ஸ்டாலின் எந்த காலத்தில் முதல்வராக வர முடியாது என்று கூறியுள்ளார். மேலும் 10 வருட காலமாக மக்களின் வெறுப்பை பெறாத நல்லாட்சி அதிமுக கொடுத்துக்கொண்டிருக்கிறது. பதவி சுகத்துக்காக தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்த கட்சிதான் திராவிட கட்சி என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

Categories

Tech |