திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்ததால் படிப்படியாக தளர்வுகளை அறிவித்துக் கொண்டு வருகின்றது. ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெட்ரோல் விலை இன்று 100 ரூபாயை தாண்டியுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கின்றது என அவர் கூறியுள்ளார். இதனால் ஏழை நடுத்தர மக்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். மாநில அரசின் வரியை குறைப்போம் என்று தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.