நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதியையும் அறிவித்தார். அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்தலும் , வாக்கு எண்ணிக்கை 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் அக்டோபர் 6ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.