திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கின்றது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் காட்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கொண்டகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் இன்று மக்கள் சபை கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.