Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK அரசு டிஸ்மிஸ் ஆகி இருக்கும்…! உஷாரா இருக்க வேண்டாமா ? தமிழக அரசை அலெர்ட் செய்த பாஜக..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது,ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த விஷயம் எல்லாம் பேசக்கூடாது, இதெல்லாம் தவறு. Whatsapp மெசேஜ்ல இது இருந்துச்சு, இது நடந்தது, இது நடந்தது இன்னும் அடுத்த கட்டம் கூட போகவில்லை. ஒரு நாட்டின் மிக முக்கிய பிரச்சனை உள்துறை. அதிலும் மிக முக்கியமானது  உயிரை, உடைமையை பாதுகாப்பது. அதிலும் மிக முக்கியமானது மக்களுக்கு நிம்மதியை கொடுப்பது.

ஒருவேளை இந்த தற்கொலைபடை தாக்குதல், நடந்திருந்தால் இன்று கோயம்புத்தூர் உடைய நிலைமை என்ன ஆகி இருக்கும் ? இந்த அரசு உடனே டிஸ்மிஸ் ஆகிருக்கும். ஏன்னா இதற்கு முன்பு இன்டெலிஜென்ஸ்ல இருக்கக்கூடிய அனைவருக்கும் தெரியும்.

இப்பதான் பி.எஃப்.ஐயை தடை பண்ணி இருக்காங்க. பாரதிய ஜனதா கட்சியினுடைய அலுவலகம்,  பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டர்கள், தலைவர்கள், ஆதரவாளர்கள் மீது கிட்டத்தட்ட 30 இடத்துக்கு மேல குண்டு வீசி இருக்கிறார்கள். அது நடக்கும் போதே ஒரு உள்துறை இருக்கக்கூடிய எந்த ஒரு காவல்துறையின் நண்பருக்கும் இது தெரியும். அடுத்த கட்டம் இதுதான் என்று…  இவர்கள் எல்லாம் ஆல்ரெடி ரேடார்னு இருக்காங்க,  ஸ்கேன் இருக்காங்க.

தமிழக உள்துறை இன்னும் ஒரு படி மேலே சொல்றோம். இது சொல்லக்கூடாது. இருந்தும் சொல்ல வேண்டியது எண்களின் கடமை. ஏன் சொல்லணும் என்றால்?  அடுத்த கட்ட உயிர் சேதம் நடக்கக்கூடாது என்பதற்காக இந்த வார்த்தையை சொல்கின்றோம். பொதுவாக ஒரு அரசியல்வாதி சொல்வது மிக தவறு. அது என்னுடைய மாண்புக்கு ஒரு இழுக்கு, ஒரு படி மேல போறோம். 2021 வரை தமிழகத்தினுடைய உள்துறை ஸ்ட்ரக்சர் வேற  மாதிரி இருந்துச்சு. ப்ரொபஷனல் தான் உள்துறையில் இருப்பாங்க என தெரிவித்தார்.

Categories

Tech |