இன்னும் நான்கு மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டவே இந்த தேர்தல் என மு.க ஸ்டாலின் பேசினார்.
தேனியில் உள்ள போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நேற்று நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அதற்காக திண்டுக்கல் மாவட்ட எல்லையான அய்யலூர் வந்த ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து செம்பட்டி, வக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது வேனில் இருந்தபடியே ஸ்டாலின் பேசியது, உங்கள் அனைவரின் அன்பான வரவேற்புக்கு நன்றி. உங்களுடைய உற்சாகத்தை பார்க்கும்போது விரைவில் திமுக ஆட்சி மலர்வது உறுதி என்பது கண்கூடாக தெரிகிறது. இன்னும் நான்கு மாதத்தில் உங்களது எதிர்பார்ப்பு நிறைவேறும். மோடியின் கைப்பாவையாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை தூக்கி எறியும் காலம் மிக விரைவில் வந்துவிட்டது. எதற்கெடுத்தாலும் கலெக்சன், கமிஷன் என்று இருக்கும் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டவே இந்த தேர்வில் வந்திருக்கிறது. தமிழகம், இந்திய அளவில் தலை நிமிர்ந்திட நல்லாட்சி அமைக்க நான் ரெடி நீங்க ரெடியா இவ்வாறு அவர் பேசினார்.