நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,நான் உன் சாதி என்னவென்று கேட்பது அதை ஒழிக்க… நான் கேட்பது சாதித்துவத்தை நவீனப்படுத்துவது என்றால், நீ சாதி கேட்டு சீட்டு கொடுக்குறீயே… அது நவீனப்படுத்தி சாதியை வழக்குறது இல்லையோ….
அது என்ன ? உங்களுக்கெல்லாம் வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ? ஆகிறது. நீ சாதி பார்க்காமல் சீட்டு குடுப்பியா ? தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி.. ஆதி தமிழ் குடிகளுக்கு… தேவேந்திரர்களுக்கு தெற்கேயும், வடக்கே ஆதி தமிழ் குடி பறையர்களுக்கு…. 26 தொகுதி பொது தொகுதிகளில் நிக்க வச்ச ஒரு கட்சி சொல்லுடா ? போன 2021 சட்டசபையில் 16 தொகுதி.
2016இல் 26 தொகுதியில் வேட்பாளரை நிறுத்தினோம். திராவிட முன்னேற்ற கழகம் ஒரு பொது தொகுதியில் ஆதி தமிழ் குடியை தேவேந்திரரை அல்லது பறையறை நிப்பாடிரு.. சொல்டா.. கட்சியை கலைச்சிட்டு போறேன்… சொல்றா பாப்போம்.பெரம்பலூர் பொது தொகுதி ஆயிடுச்சுன்னு இங்க இருந்து நீலகிரியில் கொண்டு எங்க அண்ணா ஆ.ராசாவை நிறுத்தின. அவ்வளவு தான் உன் ஆண்மை.
அவ்வளவுதான் உன்னுடைய சமூகம் நீதி. அதற்கு ஜெயலலிதா ஒரு பிராமண பெண்ணாக இருந்தாலும், தலித் எழில் மலையை கொண்டு போய்… திருச்சில நிறுத்தி பாராளுமன்ற உறுப்பினராக நிறுத்தி ஜெயிக்க வைத்தார்கள். அந்தத் துணிவு, அந்த திமிரு, ஆர்ய பெண்… பார்ப்பன பெண்ணுக்கு இருந்த துணிவு… திராவிட திருவாளர்கள் யாருக்காவது இருந்ததா ? பிரபாகரன் மகனுக்கு தாண்டா இருக்கும் அது என தெரிவித்தார்.