Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

புதிய அணியை உருவாக்கிய திமுக…. முக்கிய முடிவு எடுத்து அதிரடி …!!

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உயர்நிலை திட்டக்குழு ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை திட்டக்குழு ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி குறித்தும், அடுத்த கட்ட தேர்தல் பரப்புரை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் உதயநிதி ஸ்டாலின் கைது உள்ளிட்டவற்றை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகின்றது.

திமுக உயர்நிலை திட்டக்குழு ஆலோசனை கூட்டத்தில் திமுக உயர்நிலை திட்டக்குழு உறுப்பினர்கள் 30 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், அ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், தயாநிதி மாறன், கனிமொழி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே தற்போது, திமுக-வில் சுற்றுச்சூழல் அணி என்று புதிதாக அணி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மாநிலச் செயலாளராக கார்த்திகேய சேனாபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இதற்கான அறிவிப்பை கட்சிச் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |