Categories
அரசியல்

எதிர்க்க தெம்பில்லாத…. திராணி இல்லாத திமுக… வெளுத்த எடப்பாடி பழனிசாமி …!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  எதிர்க்க தெம்பில்லாத,  திராணி இல்லாத நீங்கள் வேட்பு மனுக்களை நிராகரிக்கிறீர்களே என எடப்பாடி குற்றம் சாட்டிள்ளார்.

கள்ளக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 30 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இருக்கின்றது. நாங்களும் உள்ளாட்சி தேர்தல் நடத்தினோம்…. நான் முதலமைச்சராக இருந்தபொழுது உள்ளாட்சித்தேர்தல் நடத்தினேன்….  இந்த ஒன்பது மாவட்டத்தை தவிர்த்து மீதி மாவட்டங்களில் எல்லாம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அந்த உள்ளாட்சி தேர்தலிலேயே ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தினோம்.

விருப்பு, வெறுப்பு இல்லாமல் தேர்தலை நடத்தினோம். மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு இருந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. எவ்வித பாகுபாடும் இல்லை. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்…. திராவிட முன்னேற்ற கழக தலைவருக்கு அப்பவாவது உறைக்குதா ? என்று பார்க்கலாம்… உறைக்கும் என்று நினைக்கிறேன்..

என்னுடைய எடப்பாடி சட்டமன்ற தொகுதி…. முதலமைச்சருடைய தொகுதி… நான் முதலமைச்சராக இருந்த போது எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் 3வது வார்டு கவுன்சிலர் 14 ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். 10-ஆவது வார்டு நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் 11 ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

நாங்கள் ஏதாவது அறிவித்தோமா…. முதலமைச்சர் சட்டமன்ற தொகுதியில்…. ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற தேர்தலை நேர்மையாக நடத்தினோம்….  யார் வெற்றி பெற்றார்கள் அவர்களை அறிவித்தோம்… அதுதான் தேர்தல், நேர்மையான தேர்தல். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  எதிர்க்க தெம்பில்லாத,  திராணி இல்லாத நீங்கள் வேட்பு மனுக்களை நிராகரிக்கிறீர்களே  வெட்கமாக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு தில்லுமுல்லு செய்து, முறைகேடு செய்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அதற்கு உண்டான வழிகளை பின்பற்றி கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்தார்.

Categories

Tech |