Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK ஹாட்ரிக் தோல்வி… படுத்துக்கொண்டே ஜெயிச்ச ADMK… காலரை தூக்கிவிட்ட ஆர்.பி உதயகுமார் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  இன்றைக்கு டிஜிட்டல் உலகம். இன்றைக்கு உள்ளங்கையில் உலகத்தை கொண்டு வரும் டிஜிட்டல் உலகத்திலே.. வீட்டிலிருந்து  அனைத்து நூலகத்தையும் கூகுளில் போனால் எல்லா நூலகத்தையும் விவரங்களையும் நாம் பெற முடியும். ஆனால் இன்றைக்கு அவருடைய தந்தையார் பெயரை நிலை நிறுத்துவதற்காக அவர் எடுத்திருக்கின்ற முயற்சி,

அவர் காட்டுகின்ற அக்கறை, இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஒரு முறை கூட அவர் நேரில் சென்று  ஆய்வு செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. அதற்கு விளக்கம் வேண்டுமானாலும் கொடுக்கலாமே தவிர மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒருமுறை கூட அங்கே சென்று இந்த எய்ம்ஸ் மருத்துவமனை தென் தமிழக மக்களுடைய வரப்பிரசாதமாக மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி யார் அவர்கள் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை இந்திய திருநாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு சாமானிய முதல்வராக இருந்து சாதித்து காட்டி, சாதனை படைத்திருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள்.

அந்த திட்டங்களைத் தான் இன்றைக்கு திறந்து கொண்டிருக்கிறார்கள், மாவட்ட ஆட்சியர் கட்டடங்களாக இருந்தாலும் சரி, மருத்துவமனை கட்டிடங்களாக இருந்தாலும் சரி, கூட்டு குடிநீர் திட்டங்களாக இருந்தாலும் சரி, இவை எல்லாம் அண்ணன் எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் அம்மாவின் அரசில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், புதிய திட்டங்கள் அறிவிப்பின் நிலையில் தான் இருக்கிறது.

505 வாக்குறுதிகளை கொடுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த தேதி வரை எதுவும் அவர் அறிவிக்கவில்லை, அதை செயல்படுத்தவில்லை, ஆனால் விழா மட்டும் நடந்து கொண்டே இருக்கிறது. இது எப்படி இருக்கிறது ? என்று சொன்னால் இந்த விழா நாயகனாக அவர் நகர்வலம் வருவது இன்றைக்கு பார்ப்பவர்கள் எல்லாம் இன்றைக்கு பார்த்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களே தவிர அவர்கள் வாழ்வை வளப்படுத்துவதற்காக எந்த நடவடிக்கையும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆகவே அவர் தேர்தல் தோல்வி பற்றி இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.

மதுரையில் கொடுத்திருக்கின்ற காரணத்தினால் நான் சொல்கிறேன். பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உயிரோடு இருக்கிற வரை 77 இல் நடந்த சட்டமன்றத் தேர்தல், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அவரது தந்தையார் கலைஞர் அவர்கள் தலைமையாக இருக்கின்ற போது திராவிட முன்னேற்ற  கழகத்திற்கு தோல்வி. 80-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவருடைய தந்தையர் திமுகவின் தலைவராக இருந்து தோல்வி, 84-ல் புரட்சித்தலைவர் அமெரிக்கா மருத்துவமனையில் சிகிச்சையில் படுத்து கொண்டே பிரச்சாரம் செய்கிற போது,

இங்கே 84 திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஹார்டிக் தோல்வி, உடனே அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை கலைத்துவிட்டு தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் தந்தையார் சென்று விட்டாரா? இல்லை. ஆகவே இன்றைக்கு அம்மாவின் மறைவுக்கு பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தோல்வி ஏற்பட்டு இருக்கிறது என்று, இன்றைக்கு ஆடு நனைகிறது என்று ஏதோ கவலை பட்டதைப் போல,

இன்றைக்கு அவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி அவர் கவலை பட்டதாக எங்களுக்கு தெரிகிறது. ஆக திராவிட முன்னேற்றக் கழகத்தில் நீங்கள் பொறுப்பேற்றுதற்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இன்றைக்கு  2011, 2016ல் மாபெரும் வெற்றி பெற்றார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே  இல்லை என்கின்ற அளவிற்கு இந்தியாவின் மூன்றாவது மாபெரும் இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கி தந்தார்கள்.

Categories

Tech |