Categories
மாநில செய்திகள்

மே 31ம் தேதி ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு!

திமுக தலைமையில் நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (31-05-2020) மாலை 4.30 மணிக்கு காணொலி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு மறுக்கும் பிரச்னை குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கோரிக்கைகள் ஒவ்வொன்றும் முக்கியமானது முதற்கட்டமாக ஒரு லட்சம் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன முக்கியமான கோரிக்கைகள் என்பதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார் மின்னஞ்சல் வழியாக பகிரும் 6 லட்சம் மனுக்களை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும்

Categories

Tech |